நீண்ட கால அமைதிக்கு பின், அரசுடனும் எதிர் கட்சி உடனும் இருபதுக்கு மேற்பட்ட பல சுற்று பேச்சுக்களின் பின் இன்று காலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வாய் திறந்தது. பொதுவேட்பாளர் மைத்திரிக்கு தனது கட்சி இன் முழு ஆதரவு என்று தெரிவித்தார்.
இதை கேள்வி உற்ற கிழக்கு மாகாண மக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடிவருகின்றனர். இருப்பினும் கூட ஸ்ரீ.மு.கா இன் முஸ்லிம் கரையோர மாவட்ட அழகு மீண்டும் மீண்டும் கனவாக போனது, 2010 ம் ஆண்டு ஆளும் ஐ.ம.சு .கூ உடன் இணைந்து கொண்ட போது முஸ்லிம் காங்கிரஸ் சில நிபந்தனைகள் விதைத்தது அதை ஏற்றுக்கொண்டு ஆளும் ஐ.ம.சு .கூ முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளை பாராளுமன்ற பெரும்பாண்மை பலத்தை பெற்றுகொள்ள பயன்படுத்தியது. ஆசை வார்த்தைகளை நம்பி ஏப்பம் விட்டது. இருந்தும், இவர்களின் கோரிக்கைகள் வெறும் எழுத்து வடிவிலே கண்காட்சி பொருளாக முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தார்கள். அதை நிறைவேற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அரசுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அதை மகிந்தவின் ஆளும்கட்சி கண்டுகொள்ளாமல் விட்டது.
இருந்தும் 2015ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கபட்டதும் முஸ்லிம் காங்கிரஸ் போர் கொடி தூக்கியது அரசுக்கு எதிராக. இருப்பினும் கூட முஸ்லிம் காங்கிரஸின் பிரதான கோரிக்கை வடக்கு, கிழக்கு பகுதியில் காணப்படும் முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள். முஸ்லிம் கரையோர மாவட்ட கோரிக்கைஇ கிழக்கு மாகாண சபை முதல்அமச்சர் பிரச்சினை என்ற பிரதான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதுக்கான பதில்கள் அரசிடம் இருந்து வருவதாக தென்படவில்லை இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் பொறுமையை கையாண்டது. இறுதியில் போனா பரவாயில்லை முஸ்லிம் கரையோர மாவட்ட கோரிக்கை ஆவது நிறைவேற்றுங்கள் என்று அரசிடம் பணிந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த கரையோர மாவட்ட கோரிக்கையை மட்டும் முன்னிலை படுத்தியதுக்கு பிரதான காரணம் கீழே வருமாறு.
முன்னால் ஸ்ரீ.சு.க இன் செயலாளர் மைதிரிபால சிறிசேன எதிர் அணியின் ஜனாதிபதி போதுவேட்பாளர் வந்த போது இலங்கை அரசியலில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டது. முன்னால் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் வருகை எதிர் கட்சியை மேலும் பலம் அடைய செய்தது. இதனால் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் எதிர் அணியுடன் கைகோர்த்து போனது இதனால் அரசு தடுமாறியது. இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆதரவு எதிர் அணியின் மைத்திரிக்கு அலை வீசியது இதனால் முஸ்லிம் மக்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் எதிர் அணியுடன் இணைந்துகொள்ள எண்ணியது.
எனினும் எதிரணியுடன் அள்ளுண்டு இணைவதன் மூலம் மு.கா இன் கரையோர மாவட்ட கோரிக்கைக்கு எதிரணியில் இருந்து எந்த பதிலும் வரவும் இல்லை காரணம் ஜாதிகஹெல உறுமய போன்ற கடும்போக்கு பெரும்பாண்மை அரசியல் அமைப்பினால் இதை ஒரு நாளும் நிறைவேற்ற ஏற்றுகொள்ள முடியாத ஒரு கோரிக்கை இருந்தும் ஜாதிகஹெல உறுமயவின் ஆதரவு ஆளும்கட்சி உடன் விளக்கிக்கொள்ள ஸ்ரீ.மு.கா இன் கரையோர மாவட்ட கோரிக்கைகான சமிக்கை ஆளும்கட்சி இடம் இருந்து தென்பட்டது. இதனால் ஸ்ரீ.சு.க இனால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாத ஒரு கரையோர மாவட்ட கோரிக்கை தூக்கி பிடித்தார்கள். இதனால் அரசில் காணப்படும் சில கடும்போக்கு பேரினவாத அரசியல்வாதிகள் இதை முற்றாக எதிர்த்தனர்.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் இதை ஒரு சந்தர்ப்பம் என்று எதிர் அணியை நோக்கி காய் நகர்த்தியது அச்சந்தர்ப்பத்தில் ரிசாட் அணியின் அ.இ.மு.கா அரசைவிட்டு வெளியேறி எதிரணியுடன் இணைந்தது இதனால் அரசு மீண்டும் திக்குமுக்காட ஸ்ரீ.மு.கா மீண்டும் அரசிடம் இதுதான் சிறந்த தருணம் என்று மீண்டும் கரையோர மாவட்ட கோரிக்கை போர் கொடி தூக்கியது. அரசும் இதனால் வேறு வழி இன்றி வளைந்து கொடுத்தது. இதனால் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் கரையோர மாவட்ட கனவு 2001 இல் இருந்து ஆட்சி செய்யப்பட்ட பேரினவாத அரசிடம் முன்வைக்கப்பட்ட போதும் அது எந்த அரசாங்கத்தினாலும் நிறைவேற்ற படவில்லை.
ஆகவே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் கூட நிறைவேற்ற முடியாத கரையோர முஸ்லிம் மாவட்ட கோரிக்கை தற்போதய மு.கா தலைமை ஏற்படுத்தி கொடுக்குமாயின் அது இலங்கை முஸ்லிம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் குறிக்கப்படும். அதனால் மு.கா தலைமை பல்வேறுபட்ட மக்கள் விமர்சனம் எதிர் நோக்கியது. சில அரசியல் காழ்புணர்ச்சியை கொண்ட சில அரசியல் வாதிகள் மு.கா தலைமையை பொது பல சேனா அமைப்புடன் பின்னி பிணைந்து பேசினார்கள். சில குள்ள நரிகள் மு.கா தலைமையை மிகவும் அழுத்தத்திற்கு ஏவினார்கள். கட்சிக்கு தெரியாமல் இரவோடு இரவாக மு.கா கட்சியை, தலைமையை தன்னுடைய சுயநலத்துக்காக விலை பேசினார்கள்.
இருத்தும் தலைவர் அமைதியாக இருந்தார். இறுதியில் பசில் ராஜபக்ஷ உடன்பாடு கொண்டு கடந்த வியாழன் இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கரையோர முஸ்லிம் மாவட்ட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கபட்ட போது அமைச்சர் பி.ஜயரத்ன அவர்களின் கடும் எதிர்ப்பினால் அது நிறைவேற்றபடவில்லை. அப்படி நிறைவேற்ற பட்டாலும் கூட பாராளுமன்றத்தில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பட்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவை பெறவேண்டும். ஆனால் அரசிடம் அப்போது 149 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர். இது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை விட குறைவாகும். சிங்கள நாட்டில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு மாவட்டம் கோருவது நடைமுறை சாத்தியம் அற்ற ஒன்று. இருந்தும் தலைவர் ஹகீம் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
முஸ்லிம் சமூகத்துக்கு தன்னால் மறைந்த முன்னால் தலைவரின் கனவை நிறைவேற்ற அரசிடம் அமைதி காத்து முஸ்லிம் மக்களின் சாபாத்தை பெற்றார். இறுதியில் அரசிலிருந்து நட்புடன் வெளியேறியது. அதைதான் முஸ்லிம் காங்கிரஸ் விரும்பியது. முஸ்லிம்கரையோர மாவட்டகோரிக்கை ஒரு கனவாகவே மீண்டும் போனது. இவரிடம் இருந்து அரசியல் பாடத்தை எமது சில முஸ்லிம் அமைச்சர்கள் கற்றுகொள்ளவேண்டும். பணத்துக்கும் சுயபோகதிக்கும் அரசியல் செய்யாமல் முஸ்லிம் சமூகத்தின் பெருமைக்குரிய கோரிக்கை ஒன்றுக்கு அவர் காத்து வந்த அமைதி என்றும் எமது நேசத்தில் இருக்கும்.
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இறுதி முடிவுக்கு நெடுகாலம் காத்திருந்தனர். அவர்களின் நெஞ்சத்தில் கறுப்பு ஜூலை அலுத்கம கலவரத்தால் ஏற்பட்ட வெறுப்பில் அரசியல் ஆர்வமின்றி இருந்ததனர். இன்றில் இருந்து அம்மக்கள் அரசியல் வேலைத்திட்ட போக்குகளில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் சாணக்கியம். இனி வரும் எட்டு நாட்களும் அரசியல் களைகட்ட போகிறது கிழக்கு மாகணத்தில். இதனால் முஸ்லிம் காங்கிரஸின் அமைதி இல் அரசியல் நடத்திய சில குள்ள நரிகள் ஓடி ஒழிய போகின்றன. சத்தியம் வெல்லும். ”இது ஆழ மரம் எங்களை ஆளவந்த மரம்”
Published by
![slmc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/slmc1.jpg?w=150&h=113)
Leave a comment