ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஐயன்கேணி தமிழ் பிரிவு, ஐயன்கேணி முஸ்லிம் பிரிவு, அப்துல் மஜீத் மாவத்தை, ஹிஜ்ரா நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் – முஸ்லிம் மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  28-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை ஐயன்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து பார்வையிட்டார்.

அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியில் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த மக்களுக்கு உடணடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் 355 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இவ் விஜயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எம்.ஐ.எம். வஹாப்தீன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மொண்டி, ஆரையப்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ. குணரட்னம், உதவிப் பணிப்பாளர் மனோஹிதராஜ், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஆர். இன்பராஜன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ். றவூப், ஏறாவூர் அபிவிருத்திக் குழுவின் தலைவர் எம்.எச். ஜலால்தீன், ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.எச்.எம். மாஹிர்  உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியில் அரிசி, சீனி, பால்மா, மீண் டின், பருப்பு, பிஸ்கட், மா, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் உள்ளது.

மேற்படி ஏறாவூர் பற்று ஐயன்கேணி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment