காத்தான்குடி: தற்பொழுது இலங்கை முழுவதிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சொந்த வீடுகளை இழந்து பொது இடங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். எமது காத்தான்குடியிலும் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறான மக்களுக்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் உணவுகளைச் சமைத்து எமது இளைஞர்களும் பொது நிறுவனங்களும் வழங்கி வருவது அளப்பரியது.
ஆனாலும், இம்மக்களின் வெளித்தேவையான மலசலகூட வசதிகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.
பெண்களும் குழந்தைகளும் மலசலகூடங்களை உபயோகிக்க முடியாத நிலையில் இவர்கள் தங்கியுள்ள இடங்களில் நிலைமை பரிதாபகமாக உள்ளன.
இதேபோல் காத்தான்குடியின் அநேகமான வீடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மலசலகூடங்கள் பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே ஊர் பிரமுகர்கள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி, பள்ளிவாயல்கள், மத்ரஸாக்களில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்களை பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
Published by


Leave a reply to Azhar Cancel reply