ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஏறாவூர் நளீம் ஹாஜியார் அரிசி ஆலையில் 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
இவ் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெரும்திரளான உலமாக்கள், புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், மீனவர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள்,கூலி தொழிலாளிகள் ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.எச்.எம்.மாஹிர், முன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.றவூப் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment