ஏறாவூர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் வசதி குறைந்த 216 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழக்கும் நிகழ்வு 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எச்.ஜலால்தீன்,ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.எச்.எம்.மாஹிர் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment