ஏறாவூர்: நேற்று மாலை ஏறாவுருக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிஷாத் பதுர்தீன் அவர்களுக்கு ஏறாவூர் மக்களால் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடியில் கிழக்குமாகானசபை கௌரவ உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் சிப்லி பாரூக் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு
,ஏறாவூரை நோக்கி வந்த சமூகக் காவலன் ரிஷாத் பதுர்தீன் அவர்களை பெற்றோல் நிரப்பு சந்தியிலிருந்து ,புன்னக்குடா வீதி வரைக்கும் ஊர்வலமாக மாலையிட்டு,பட்டாசு கொழுத்தி இவ்வூர் மக்களால் அழைத்துவரப்பட்ட நிகழ்வு கண்கொள்ளாக்காட்சியாக பரிணமித்தது.
கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர், ஐ.தே.க. அமைப்பாளர் சகோதரர் ஏ.சி.கியாஸ் ,தேசிய காங்கிரஸின் மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ,புன்னக்குடா வீதியில் பொதுவேட்பாளர் தேர்தல் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய தேசியத்தலைவன் ரிஷாத்,
அன்பின் ஏறாவூர் வாழ் மக்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்றைய இறுக்கமான அரசியல் சூழ்நிலையில் உங்களையெல்லாம் சந்திக்க வைத்த அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக , இன்று எமது சமூகம் நிம்மதியற்று காணப்படுவதை உணர்ந்து பல்வேறு வகையிலும் தற்போதைய அரசுடன் கலந்துரையாடி தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அரசைவிட்டு விலகி உங்களுக்காக வெளியேறியிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஜனாதிபதியை அரியாசனம் ஏற்றுவதற்காக 2005 ம் ஆண்டிலும், 2010 ம் ஆண்டிலும் அரும்பாடுபட்ட கட்சி என்ற வகையிலும், இந்த நாட்டிலே சமாதானத்தை கொண்டுவருவதற்காக உதவிசெய்த கட்சி என்ற வகையிலே .இந்த நாட்டிலே பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கு பக்கபலமாக இருந்த கட்சி என்ற வகையிலும் இந்த அரசைவிட்டு வெளியேறுவதா, இல்லையா என்று நாடு முழுவதுமுள்ள ,கட்சிதொண்டர்களிடத்திலும் ,உலமாக்களிடத்திலும், கட்சி உயர்பீடத்திலும்,பலகலைக்கழக மாணவ சமூகத்திடமும் ,எனது மாவட்ட மக்களிடத்திலும் பேசினோம்.
இந்தக் கட்சி எமது சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி, தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப்பின்னர் இந்த சமூகத்துக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட கட்சி இந்த சூழ்நிலையில் எவ்வாறான முடிவினை எடுக்க வேண்டுமென்று மிக ஆழமாக சிந்தித்தோம்.
அதன் பிறகுதான் அல்லாஹ் மீது தவக்கல் வைத்து இந்த நாட்டின் இருபது லெட்ச முஸ்லிம்களின் மானமும்,மரியாதையும்,எங்களது மார்க்கமும் முக்கியம் என்பதை மையமாக வைத்துத்தான் இந்த மத்ரிபாலசிரிசென அவர்களை ஆதரிக்க முடிவெடுத்தோம்.
அந்த முடிவை எடுத்து இருபத்திநான்கு மணித்தியாலத்துக்குள் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் “இது மடத்தனமான முடிவு,ரிசாத் மடத்தனம் செய்துவிட்டார், எட்டாம் திகதி கவலைப்படப்போகிறார் ” என்று அறிக்கை விட்டிருப்பதை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள்.
இந்த அரசு எனக்கு மட்டும்தான் மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைவர் பதவியையும், மிகப்பெரிய அமைச்சையும் ,நாற்பத்தைந்து பொலிசாரையும் தந்தது. இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டுத்தான் எமது சமூகம் என்ற ஒரே நோக்குக்காக இந்த ஜனாதிபதியை தோற்கடித்து ,மைத்திரி என்ற புதிய ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்து எமது சமூகம் நிம்மதிபெருமூச்சு அடைய வேண்டும் வேண்டும் என்பதற்காக வெளியேறியிருக்கிறேன்.
வன்னி மாவட்ட முஸ்லிம்அகதிகள் முப்பது சதவீதம்பேர் மாத்திரம்தான் மீள்குடியேற்றப் பட்டிருக்கிறார்கள்.கொட்டிலேலே தூங்க முடியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் அந்த மக்கள் என்னிடம் மிக தைரியமாக ” எங்களைப்பற்றி கவலை கொள்ளாதீர்கள்,எமது சமூகத்தை காப்பாற்ற சிறந்த முடிவை எடுங்கள் ” என்று எனக்கு உரமூட்டினார்கள்.
இந்த அரசின் அந்திமகால ஆட்சியில்தான் இறையில்லங்கள் உடைக்கப்பட்டும்,எரிக்கப்பட்டும்,முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் ,முஸ்லிம்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் ,ஹலால் உணவு மறைக்கப்பட்டும், இன்னும்பல விடயங்கள் முஸ்லிம்களுக்காக அரங்கேறி இருக்கிறது.
ஆன காரணத்தினால்தான் இந்த சமூகப்பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த அரசைவிட்டு வெளியேறி இருக்கிறோம்.
ஆகவே,என் அன்பு ஏறாவூர் சமூகமே ,நீங்களும் இந்தப் பயணத்தில் தலைநிமிர்ந்து நடந்து மைத்ரியின் சின்னமான அன்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெற உதவுங்கள் என்று கூறி முடித்துக்கொண்டு ஓட்டமாவடியில் நடைபெறவுள்ள மாபெரிய ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.
Published by


Leave a comment