– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் முச்சக்கர வண்டி சாரதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள கடாபி வலீமா மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்புக்கு தலைமைத்துவசபை உறுப்பினர் பொறியியலாளர் MMபழுலுல் ஹக் தலைமை தாங்கினார்.
எதிர்வரும் ஜன்னாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்கு எத்தகையது என்பது தொடர்பிலும் எதற்காக இந்த ஆட்சிமுறை மாற்றம் என்பது தொடர்பிலும் முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்க அங்கத்தவர்கள், பிரத்தியேக முச்சகர வண்டி சாரதிகள் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Published by



Leave a comment