காத்தான்குடி: மட்டக்களப்பு கிராம சேவகர் பிரிவு மஞ்சந்தொடுவாய் பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை பதியவென அப்பகுதி கிராம சேவகர் கடமையில் இருந்த சமயம் அங்கு வந்த காத்தான்குடியை சேர்ந்த ஒரு இளைஞன் குறித்த கிராம சேவகருடன் தர்க்கம் புரிந்து அவரை தாக்க முற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் ஒரு மாற்று மதத்தை சோந்த பெண் கிராம சேவகர்தான் சிறப்பாக கடமை செய்கின்றார் என்றும் இவர் இன்று (26.12.2014 வெள்ளிக்கிழமை) மாலை நேரமாகியும் மக்களின் நலன் கருதி பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை பதிந்து கொண்டிருந்த வேளையிலேயே மேற்படி சம்பவம் நடை பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதனால் குறித்த நபரை சிலமணி நேரங்களுக்குள் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
Published by
![300px-Arrest.svg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/300px-arrest-svg1.png?w=150&h=150)
Leave a comment