காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் வகையில் அவரது தேர்தல் சின்னமான வெற்றிலைச் சின்னத்திற்குஎதிரில் புள்ளடியிட்டு அடையாளப்படுத்தும் பாரிய கட்அவுட்கள் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ளன. இந்த கட்அவுட்களை ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ
அவர்களின் மட்டக்களப்புத் தொகுதிக்கான தேர்தல் முகவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வே ஜனநாயகத்திற்கும், தேர்தல் சட்ட ஒழுங்கிற்கும் முரணான வகையில் நிறுவியிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி பிரதான வீதிக்கு குறுக்காகவும், உள்ளக வீதிகளிலும் இவ்வாறான பாரிய கட்அவுட்கள் காணப்படுவதுடன், சட்டவிரோதமான முறையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும் இதுவரை அகற்றிப்படாமல் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த கட்அவுட்களை அகற்றுவது தொடர்பில் காத்தான்குடி பொலிசாரோ, அல்லது இப்பிரதான பாதை வழியாகப் பயணிக்கும் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகளோ எதுவித அக்கறையையும் காட்டவில்லை என்றும், காத்தான்குடி பொலீசார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைகளைச் செயற்படுத்துபவர்களாகவே தொடர்ந்தேச்சையாகச் செயற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தகவலும், படங்களும்:
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
Published by





Leave a comment