“றிசாட், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு முட்டாள்தனமானது”

hizbullah (3)காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையான முடிவாகுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அ. இ. ம. கா. இன் தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எடுத்த முடிவையடுத்து காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி விக்கையில்:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போhizbulla bazeer rishadது எமது கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் அதனை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதியளித்தது. அதில் பிரதானமாக ஜாதிக்க ஹெல உருமய கட்சியினால் தடுத்து நிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 500 வீடுகளையும் மீள முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த கட்டத்தில் அ. இ. ம. கா. தலைவர் மைத்திரிபாலவை ஆதரிக்க தீர்மானித்துள்ளமை மிகுந்த கவலை யளிக்கிறது.

இந்த முடிவை நான் மறுப்பதுடன் நான் உட்பட கொழும்பு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். அஸ்வர் உட்பட காத்தான்குடி நகர சபை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம். றிசாட் பதியுதீன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது. எமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

One response to ““றிசாட், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு முட்டாள்தனமானது””

  1. mahanee ini onakku sanguthaan ooooooooooooooooooooooooooooooooo

Leave a comment