ஏறாவூர்: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை கருத்தில்கொண்டும், நாட்டில் நல்லிணக்க ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கம் கொண்டும் எமது தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு முழு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இருந்த வேளை பொதுபல சேனா, ராவண பலய, ஹெல உறுமய போன்றவற்றால் நேரடியாக எமது சமூகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தபோதேல்லாம் நாடகம் ஆடிய ஜானதிபதிக்கு , எமது தலைவர் றிஷாத் பதியுதீன், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு முஸ்லிம் மக்களின் விடிவை நோக்கமாகக் கொண்டு அவருடன் தொடர்ந்தும் இருந்து வந்தார்.
நேற்றையதினம் எனது கட்சி எடுத்துக்கொண்ட நல்ல முடிவுக்கு இணங்க கிழக்கு மாகாணம் முழுவதுமாக பொதுவேட்பாளரின் வெற்றிக்காக அயராது உழைக்கப்போவதாக பிரதித் தவிசாளர் தெரிவித்தார்.
இம்முடிவுக்கு ஏற்ப கிழக்கு மாகாண மூவின மக்களும் ஒரு சேர மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக அவரது சின்னமான “அன்னத்துக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Published by


Leave a comment