லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறைவீரர் ஷகித் அப்ரிடி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது ‘நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.
மேலும் ‘சரியான நேரத்தில் இந்த முடிவை எடுக்கக்கூடிய தைரியம் எனக்கு உண்டானதை எண்ணி நான் மிகழ்சி அடைகிறேன். ஏனென்றால், கடந்த காலங்களில் என்னை விட பெரிய வீரர்களெல்லாம் சரியான நேரத்தில் இதைபோன்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி உள்ளனர்.
அடுத்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் கோப்பை வெல்ல வேண்டும் என்பது தான் என் ஆசை. உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஏராளமான 20 ஓவர் போட்டியில் விளையாடுவேன். 2016-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுமையான பாகிஸ்தான் அணியை உருவாக்க முயற்சி செய்வேன்.
முறையாக ஓய்வு திகதியை அறிவித்து செல்லும் முதல் பாகிஸ்தான் வீரராக நானாகத்தான் இருப்பேன். இதுவே எனக்கு போதும். ஒருநாள் போட்டியில் நான் அதிகளவில் சாதித்து விட்டேன்’ என்றார்.
34 வயதாகும் அப்ரிடி 389 போட்டிகளில் 7870 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன், 391 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்தவர் அப்ரிடி. இவரது சாதனையை 17 வருடங்கள் கழித்து நியுசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் முறியடித்தார்.
தனது சாதனையை அண்டர்ஸன் முறியடித்தது தனக்கு வேதனையளித்திருப்பதாக தனது டிவிட்டர் தளத்தில் அப்ரிடி தெரிவித்திருந்தார்.
ஓர் விளையாட்டு வீரரனாக மாத்திரமல்லாது, தனது சொந்தப் பணத்தில் தொண்டு சேவைகளை பாகிஸ்தானில் வறிய பிரதேசங்களிலுள்ள குழந்தைகளுக்கு அப்ரிடி உதவிவருவது குறிப்பிடத்தக்கது.
Published by

![Shahid-afridi-001[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/shahid-afridi-0011.jpg?w=460&h=276)
Leave a comment