காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தான் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களும் அவர்களோடு சில அரசியல் பிரிமுகர்களும் ,கட்சி உறுப்பினர்களும் இன்று ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாக தீர்மானம் ஒன்றை எடுத்து அந்த தீர்மாணத்தை எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் வைத்து பத்திரிகையாளர் மகாநாட்டின் ஊடாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு எமது கட்சி இரண்டு கட்ட பேச்சுவார்தை நடாத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு பட்ட சமூகம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அநேகமான கோரிக்கைகள் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதில் மிக முக்கியமான கோரிக்கையாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டதாகவும் மீண்டும் டிசம்பர் மாதம் 12 ம் திகதி பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாங்கள் அன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக இந்த ஆதரவை தெரிவிப்போம் என அமைச்சர் றிஸாட் பதியுதீன் எடுத்துச் சொன்னார்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் வேலைகளுக்காக ஜனாதிபதி செயலகத்தில் கட்சியின் சார்பில் சிலர் சேர்த்து செயற்படுத்துவதற்கு பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டது.
அந்த அடிப்பபையில் வேளை செய்துகொண்டிருக்கும் பொழுதுதான் இன்று தீடிரெண்று எதிர்கட்சியின் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில் கட்சியின் சார்பிலே எதிர்கட்சி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவோடு அல்லது அவர்ககோடு செயற்படுகின்ற எந்த தலைவர்களோடு எந்த விதமான பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்றதாக நாங்கள் அறியக்கிடைக்க வில்லை.
அவ்வாறான பேச்சு வார்தைகளுக்கு கட்சியினுடைய இரண்டாவது இடத்தில் இருக்கின்ற சட்டத்தரணி சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹிட் அவர்களோ கட்சினுடைய இரண்டாவது இடத்தில் இருக்கின்ற தேசிய அமைப்பாளராக இருக்கின்ற நானோ யாரும் அழைக்கப்டவுமில்லை எந்த விதமான பேச்சுவார்தையும் நடக்கப்படவுமில்லை அவ்வாறான பேச்சு வார்தைக்காக யாரும் அழைக்கப்படவுமில்லை.
அவ்வாறான நிலையில் எவ்விதமான நிபந்தனையுமில்லாமல,எந்த விதமான பேச்சுவார்தையும் இல்லாமல் இன்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரி பாலவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
ஆகவே இந்த தீர்மானத்தை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு அவசரமாக கடசியினுடைய உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் நகர சபை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆகியேரை அழைத்து கலந்துரையாடிய போது எல்லோரும் இந்த நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்திய ,இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு உறுதியான ஆட்சியை செய்யக் கூடிய ,நமது பிரதேசத்தின அபிவிருத்திக்காக நிறைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எல்லோரும் எடுத்து இருப்பதாகவும் அதே போன்று மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் உங்களோடு இருக்கின்றேன் எந்த சூழ் நிலையிலும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே போன்று இன்னும் பல உள்ளுராட்சி தலைவர்கள் எங்களுடன் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி அறிவிப்போம்.
அதே போன்று ஏனைய உள்ளுராட்சி மன்ற உறுப்பிர்கள் கட்சியினுடைய இரண்டாவது இடத்தில் இருக்கின்ற சட்டத்தரணி சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹிட் உட்பட எல்லோரும் இந்த தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுப்கொள்ளவில்லை எனவும் மறைமுகமாக யாருடனும் கலந்துரையாடாமல் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு இத் தீர்மானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுத்து இருக்கின்றோம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் அஸ்பர்,பிரதித் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், அலி சப்ரி, சியாட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment