“மைத்திரி அணியில் முஸ்லிம் விரோதிகள்:சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ அஸ்வர்

azverமுல்லைத்தீவு: மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள் நலன் பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் தெளிவு பெற்று வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார. தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி சகிதம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் உரையாற்றி வருகிறார்.

அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிமட, ஊவாபரணகம, அக்கரைப்பற்று, திருக்கோயில், கந்தகெட்டிய, வியலுவ. கிண்ணியா, சேருவில போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அஸ்வர் உரையாற்றினார். முஸ்லிம்களுக்கு விரோதமானவர் தான் சரத் பொன்சேகா முஸ்லிம்களை “வந்தான் வரத்தான் எனக் கேவலமாய் பேசியவர்தான் அவர். அவர் இன்று மைத்திரியுடன் இணைந்துள்ளார். இது எமக்கு ஆபத்தாகும். முஸ்லிம்கள் விழிப்புற வேண்டும்

ரன்ஜன் ராமநாயக்கா “ஷரீஆ சட்டம் பற்றி பாராளுமன்றில் தவறாகப் பிரஸ்தாபித்த போது நான் ரணிலிடம் வினா எழுப்பினேன். அவரோ ஒன்றும் பேசாமல் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார். மைத்திரிபால சிரிசேன முஸ்லிம்களின் எதிரியாவார்.

அரிசி வர்த்தகத்தில் முன்னேறிய முஸ்லிம்களின் அசிரி ஆலைகளை அபகரித்த அணியில் அவர் முன்னின்றவர். அவரை முஸ்லிம்கள் எப்படி நம்புவது? அளுத்கம, பேருவளை அசம்பாவிதங்கள் பற்றி மைத்திரி ஒன்றும் பேசவில்லை. முஸ்லிம்கள் இவரை நம்பக்கூடாது என்றும் அஸ்வர் தொடர்ந்து தெரிவித்தார்.

Published by

2 responses to ““மைத்திரி அணியில் முஸ்லிம் விரோதிகள்:சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ அஸ்வர்”

  1. தமது சுகபோகங்களுக்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும் தமது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் இழிகுணம் படைத்த உங்களைப் போன்ற கேடுகெட்ட, உடனிருந்தே கொல்லும் வியாதிகளைவிட யாரும், முஸ்லிம்களுக்கு விரோதியாக முடியாது!

    பொதுக் கூட்டணி ஒன்றில் ஓரே கருத்தில் இணைந்துள்ளோர் நாட்டு நலன் வேண்டி நிற்போரே! இணைந்துள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் தம்மைத் தியாகம் செய்து, இந்நாட்டைப் பீடித்துள்ள சனியனையும், அதற்கு பக்கபலமாக இருக்கும் உங்களைப் போன்ற அவமானச் சின்னங்களையும் அரசியலில் இருந்தே அகற்றி, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு சிறந்த, நல்லெண்ணத்துடனான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க உறுதிபூண்டுள்ளனர்.

    அவர்களுக்கு மக்களைப் பிரித்து தமது வாக்க வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளும் அவசியமில்லை. மக்கள் தாமாகவே வலிந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெல்ல வைத்து, நாட்டை அபாயத்திலிருந்து காக்கக் கங்கணம் கட்டி அவர்களின் பின்னால் அணி திரண்டுள்ளனர்! அதனால் உங்களைப் போன்றோரின் பசப்பு வார்த்தைகளோ, இனவிரோதக் கருத்துக்களோ மக்களிடம் எடுபடாது. மாறாக உங்களை முற்றாக ஓரங்கட்டிவிடுவர்!

  2. you prick, you are the number one enemy for the lankan muslim & you are the biggest fire wood in the hell

Leave a comment