நல்லாட்சிக்கான தேசிய முன்னணிபுத்தளம்: பொது வேட்பாளர் மைத்திரியை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் புத்தளம், மதவான்குளத்தில் இடம்பெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், புத்தளம் நகரசபையின் முன்னாள் தலைவர் நஸ்மி ஆகியோருடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் மற்றும் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் றிஸ்மி (காசிமி) ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மழை பெய்துகொண்டிருந்த நிலையிலும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்தும் பல கூட்டங்களை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நடாத்துவதற்கு நல்லாட்சிக்கான முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Published by



Leave a comment