காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதியின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அப் பிரதேச மக்களுடன் விஷேட கலந்துரையாடலொன்று 20-12-2014 நேற்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி மனாருல் ஹூதா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பாம் வீதி மற்றும் பரீட் நகர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடத்தில் பரீட் நகர் உள்ளக வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு பிரச்சினை தொடர்பாக இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதன் போது பொது மக்கள் மத்தியில் கருத்து தெரவித்த பிரதியிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த பாம் வீதியின் அபிவிருத்தக்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் தான் மேற்கொண்டுள்ளதாகவும்,தற்போது பெய்து வரும் மழை காரணமாகத்தான் இவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் மழை நின்றவுடன் இவ் வீதியின் அபிவிருத்திப் பணிகளை அவசரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும். உறுதியளித்தார்.
Published by


Leave a comment