அனுராதபுரம்: அனுராதபுரத்தில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளால் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்களுக்கு கைபேசிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகும். இவ்வாறு சட்டத்தரணிகள் சங்கம் தேர்தல் ஆணையாளருக்கு முறையீடு செய்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூபாய் 5000 ஆயிரம் வழங்கவும் இப்பணம் விவசாய உபகரணங்களுக்காக வழங்கப்படுவதாகவும் இவர்கள் ஓர் குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
ஓய்வு பெற்ற கிராம சேவகர்களை தேர்தல் கடமைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச அதிகாரிகள் தேர்தல் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தை மீறும் செயல் எனவும் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.
Published by
![mobile_phone_mass_media_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/mobile_phone_mass_media_11.jpg?w=150&h=117)
Leave a comment