– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிகொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இன்று (19.12.2014) இடம்பெற்றது. எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான்,
அதன் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி முஹம்மத் இம்தியாஸ், முஹம்மத் ஹானான், சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆட்சிமுறை சீரமைப்பு தொடர்பில் பொது எதிரணிகள் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டிய, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மொழிவுகள் இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பைரூஸ் ஹாஜியார் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.
Published by



Leave a comment