காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடும் மழைக்கு மத்தியில் காத்தான்குடியில் இடம்பெற தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதிகமான பெண்களும் சிறுவர்கள், குழந்தைகள் என பெண்கள் பகுதியில் காண முடிகிறது.
கூடாரத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தாங்கு கம்பி கீழே விழுந்ததில் இரு பெண்களின் தலைகள் வெடித்து காயமேற்பட்டுள்ளது. குறித்த பெண்கள் இருவரும் தற்பொழுது காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் எமது நிருபர் களத்திலிருந்து தெரிவிக்கிறார்.
பதட்டத்தைத் தணிக்க, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என ஒலி பெருக்கியில் அறிவித்து, மக்களை அமைதிப்படுத்தியிருப்பதாகவும் எமது நிருபர் மேலும் தெரிவிக்கிறார்.
மேலதிக விபரங்கள் விரைவில்….
Published by






Leave a comment