தேர்தல் கூடாரக் கம்பி விபத்து: 6 பெண்கள் காயம்: நால்வர் மட்டு மருத்துவமனைக்கு மாற்றம் (இரண்டாம் இணைப்பு)

mahinda– நமது நிருபர்

காத்தான்குடி: இன்று பி.ப. காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினைக் காண்பதற்கு அதிகளவான பெண்கள் வருகை தந்திருந்தனர். பெண்கள் கூடாரத்தின் பிரதான கம்பி, எதிர்பாராமல் கீழ் நோக்கி விழுந்ததில் 6 பெண்கள் தலையிலும், உடலிலும் ஏற்பட்ட பாரிய காயங்கள் காரணமாக காத்தான்குடி ஆதார  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், காத்தான்குடி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பெண்களுள் நால்வர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டுள்ளனர். 

மற்றைய பெண்கள் இருவரும் காத்தான்குடி ஆதார மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

hospital kattankudy

இன்று பி.ப. 2:30 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.எனினும் மாலை 6:20 மணியளவிலேயே மஹிந்த பிரச்சார மேடைக்கு வருகை தந்திருந்தார்.

சுமார் 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஜனாதிபதியின் உரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment