-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: இன்று(19.12.2014 வெள்ளிக்கிழமை பி.ப. 02.00 மணிக்கு) காத்தான்குடி பொது மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் முதலாவது தோர்தல் பிரச்சாரக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ தாஜூல் மில்லத் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று காத்தான்குடிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதான வீதி, கடற்கரை வீதி, ஹிஸ்புல்லா விளையாட்டு மைதான வீதி உடபட பல வீதிகள் அலங்கரிக்க பட்டுள்ளதுடன் ஜனாதிபதியின் உருவம் தாங்கிய 100 அடி உயரமான பாரிய CUTOUT ஒன்று மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல CUTOUT வீதியெங்கும் இருப்பதினை காணக்கூடியதாக உள்ளது.
மட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையு ஜனாதிபதியின் மட்டு மாவட்ட விஜயத்திற்கு காலநிலை பாதகமாக இருப்பதினை காணக் கூடியதாக இருக்கின்றது. பிரச்சார மேடை அமைந்துள்ள மைதானங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் அதற்கு மாற்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதனையும் அவதானி்க்க முடிந்தது.
காலநிலை எவ்வாறு இருந்த போதிலும் இறைதுனையுடன் ஜனாதிபதியின் வருகை, தோ்தல் பிரச்சார கூட்டம் திட்டமிட்ட படி நடை பெறும் என ஏட்பாட்டுக்குழு தெரிவித்தனர். இதற்காக வேண்டி மக்களின் நலன் கருதி இலவச பஸ் சேவை ஒன்றும் பரவலாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்பு இறுக்கமாக இருப்பதானால் அதனை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.
இன்று காத்தான்குடியில் நடை பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர். ஏற்பாட்டுக்குழுவினர்.
Published by








Leave a reply to Azhar Cancel reply