மஹிந்தவின் வரவை முன்னிட்டு இரு நாட்கள் கடைகளை மூடுமாறு உத்தரவு!

ground– நமது நிருபர்

காத்தான்குடி: நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுஜன சுதந்திர முன்னணியின் அரசியல் பிரமுகர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக காத்தான்குடிக்கு வரவிருக்கின்றனர். இந்நிகழ்வினை முன்னிட்டு, குறித்த தேர்தல் பிரச்சாரம் இடம்பெற இருக்கும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள கடைகளை இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் மூடுமாறு ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் பணித்துள்ளனர்.

இதனால் அன்றாடும் சிறு வியாபாரத்தை நம்பியிருக்கும் கடை வியாபாரிகள் அதிருப்தியடைந்திருக்கின்றனர். “நாங்கள் கடையைத் திறப்போம்” எனவும் சில கடை உரிமையாளர்கள் கூறினர்.

இதற்கிடையில் இப்பகுதியைச் சூழவுள்ள வீடுகள், மத்ரஸாக்கள் மற்றும் பள்ளிவாயல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதையும் அவதானிக்க முடிகிறது.

ground

Published by

Leave a comment