மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச கடலிலிருந்து டொல்பின் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது

unnamedஎம்.எஸ்.எம்.ஸப்றாஸ்

மட்டக்களப்பு: சந்திவெளி, பாலையடித்தோணா பிரதேச கடலிலிருந்து டொல்பின் ஒன்று நேற்றுமாலை உயிருடன் கரையொதுங்கியுள்ளது. சுமார் 5 அடி நீளம் மற்றும் 30 கிலோ எடையும் கொண்ட இந்த டொல்பினை சில மணிநேரம் கரையில் பார்வையிட்ட பின்னர் மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டனர்.

எனினும் இந்த டொல்பின் பலவீனமான நிலையில் காணப்பட்டதால் நீந்தமுடியாது தத்தளித்துக் கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. இந்த டொல்பினின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டன. இப்பிரதேச கடலில் டொல்பின் கரையொதுங்கியமை அபூர்வ நிகழ்வாகக் கருதப்படுகிறது.

unnamed

unnamed 1

Published by

Leave a comment