பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பங்கேற்பு

unnamedNFGG ஊடகப்பிரிவு

பொல்கஹவெல: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதாரித்து நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரப் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக கடந்த 16.12.2014 குருநாகல், பொல்கஹவெலயில் ஐ.தே.க ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் பொது வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க சிரேஷ்ட உறுப்பினர்களான கரு ஜயசூரிய, தயா கமகே, காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று இன்று மாலை பன்டாரகொஸ்வத்தையில் இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ரிஸ்மி (காஸிமி), சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொது செயலாளர் MR. நஜா முஹம்மத் சிறப்புரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment