காத்தான்குடி: நவீன பொன்சேகாவாகவே மைத்திரிபால சிறிசேன மாறுவார். அவரால் ஒருபோதும் இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது. கடந்த 2010ம் ஆண்டு நடபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதைவிட பல மடங்கு வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுவது நிச்சயம். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு அவர் உரைநிகழ்த்தினார். அவர் தொடர்ந்து பேசுகையில் இது சாதாரண நகர சபை தேர்தல் அல்ல நாம் சண்டைபிடித்துக் கொள்வதற்கு. இது ஜனாதிபதி தேர்தல், ஒரு தேசிய தேர்தல் ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் பெரும்பான்மை சமூகத்திடம் உள்ளன. நாம் சுமார் 13 இலட்சம் வாக்குகளை மாத்திரமே வைத்துள்ளோம். ஆகவே நமக்குள் பேதங்களை வளர்த்துக் கொள்வதில் அர்த்தமில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெல்வார் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. 10 வருடங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவோ செய்து விட்டுவந்து தான் அவர் மீண்டும் ஆணை கேட்கிறார். ஆகவே நமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்திய ஜனாதிபதிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
Published by

Leave a reply to kky hajiar Cancel reply