(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி; ஜனாதிபதி தேர்தல்(2015) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று காத்தான்குடியில் 17-12-2014 நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பெருமளவு உலமாக்கள்,கதீப்மார்கள் மற்றும் முஅத்தீன்கள், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இப் பிரதேச முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனிற்கு உதவக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடையப்போகும் வெற்றியில் பங்குதாரர்களாக முஸ்லிம் சமூகம் மாற முடியுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.



Leave a comment