வாக்குச் சீட்டு அச்சிடும் பணியில் பாதுகாப்பில் சந்தேகம்!!

ballot-paper[1]கொழும்பு: வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் பெற்றுக்கொள்ள எடுத்த் தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளின் போது கடந்த காலங்களில் பொலிஸாருடன் இணைந்து அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டு, முழுப் பாதுகாப்புப் பொறுப்பும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பகலிரவாக நடைபெற்றது. இம்முறை பகல் வேளையில் மட்டுமே வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படுகின்றன.

இவ்வாறு பகலில் அச்சிடப்படும் வாக்குச் சீட்டுக்களை இரவில் பொலிஸார் மட்டும் பாதுகாப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டு செயற்படுத்தாத பொலிஸார், நேர்மையாக தமது கடமைகளை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, பொலிஸாருடன் அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அந்த அதிகாரி கோரியுள்ளார்.

Published by

One response to “வாக்குச் சீட்டு அச்சிடும் பணியில் பாதுகாப்பில் சந்தேகம்!!”

  1. வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படும், வைக்கப்படும் இடங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதிகள் நிறுத்தப்பட வேண்டும். பாதுகாப்புக் கெமறாக்கள் நிறைய பொருத்தப்பட வேண்டும். அவற்றின் திரை வெளியில் நிற்பவர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்க வேண்டும். நீதி செலுத்தப்படுவதை மக்கள் காண வேண்டும்! செய்வார்களா!

Leave a reply to nizamhm1944 Cancel reply