நச்சுக் கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் – பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

Book cover page - Copyஎம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: ‘முஸ்லிம்கள் இந்த நாட்டு பிரஜைகள் இல்லையாம்’ இவ்வாறு சிறுபாண்மையினருக்கெதிரான நச்சுக் கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவும் ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாச்சார கண்காட்சி இறுவெட்டு வெளியீட்டு விழாவின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச செயலாளரும் விழாக்குழுவின் தலைவருமான எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவே இவ்வாறு தெரிவித்திருந்தார் நாம் 1200 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்தொட்டே இந்த நாட்டுக்கு பங்களிப்புச் செய்துள்ளோம் இவ்வாறு இருக்க இவர்களின் கருத்தினை நோக்கும்போது முஸ்லிம்களது பாரம்பரியம் கலாச்சாரம் வரலாறு என்பன இதுவரை பாதுகாக்கப்படவோ ஆவணப்படுத்தப்படவோ இல்லை என்றே தோன்றுகிறது.

இதற்காகவே காத்தான்குடியில் நூதன சாலை ஒன்று அமைக்க திட்டமிட்டு அதனை இம்மாத இறுதியில் திறக்க இருக்கின்றோம் தொல்பொருல் ஆராய்ச்சி நிலையத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே இது திறக்கப்படவுள்ளது இவ்வேலைத்திட்டத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நூதனசாலையை திறக்கவுள்ளோம் பல சவால்களுக்கு மத்தியிலும் கலாச்சார மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய அவர்களின் பூரண ஒத்துழைப்புடனுமே இவை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நாங்களும் இன்று நேற்று வந்தவர்களல்ல என்பதை பறை சாற்றுவதாக இது அமையும் என இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன் இதற்காக பல வழிகளிலும் உதவி புரிகின்ற அதி உத்தம ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் எனத்தெரிவித்தார்.

மேற்படி விழாவின்போது பல துறைகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 08 பேர் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கௌரவிக்கப்பட்டவர்களின் விபரம் வருமாறு

01. நகைச்சுவை – டீ எல் அப்துல் அஸீஸ்
02. கவிதை- எச்.எம்.எம். றகீம்
03. பாடல் – எம். ஐ. முகம்மது முஸம்மில்
04. ஓவியம் – எம். கே. பதுர்தீன்
05. ஊடகம் – எம். ஏ. சி. எம். ஐலீஸ்
06. இலக்கியம் – எம். எஸ். முஹம்மது முகைதீன்
07. அறிவிப்பு – எம். ஐ. எம். கமால்தீன்
08. கவிதை – இல்மி அஹமட் லெவ்வை

Published by

2 responses to “நச்சுக் கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் – பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா”

  1. mohamed hassan mohamed fahim Avatar
    mohamed hassan mohamed fahim

    On Dec 10, 2014 11:27 PM, “WWW.YOURKATTANKUDY.COM” wrote:

    > yourkattankudy.com posted: “-எம்.எச்.எம்.அன்வர்- முஸ்லிம்கள் இந்த
    > நாட்டு பிரiஐகள் இல்லையாம் இவ்வாறு சிறுபாண்மையினருக்கெதிரான நச்சுக்
    > கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும்
    > இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின்
    > தல”

    1. ATHARKAHA THAAN MY3KKU AATHARAU KODUKKIROOM

Leave a reply to mohamed hassan mohamed fahim Cancel reply