காத்தான்குடி: குருநாகல் மாவட்டத்தின் தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி எம். எப். எம் பாஹிர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசில் நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவனாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடமிருந்து 08-12-2014 நேற்று திங்கட்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரின் காரியாலயத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.
இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ. ரயிசுதீன் மற்றும் பிரத்தியேக உதவியாளர் எம். எம் ரிஸ்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment