– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிகாத்தான்குடி: கடந்த இரண்டு தினங்களாக (6, 7 டிசம்பர் 2014) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் NFGG, பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததன் காரணங்களையும் அத்தீர்மானத்தை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் குறித்து தமது அங்கத்தவர்களுக்கும்
ஆதரவாளர்களுக்கும் விளக்கப்பட்டன. அதன் அடிப்படையில் வாக்காளர்கள் தெளிவான நிலைப்பாடுகளுடன் அறிவுபூர்வமாக தமது வாக்குகளை பொது வேட்பாளர்களுக்கு அளிப்பதற்கு ஏற்ற வகையில் பிரசாரங்களை மேட்கொள்ளுவகான வழிகாட்டல்களும் இதன் போது வழங்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தல் குறித்த NFGG இன் செய்திகளையும் நிலைப்பாடுகளையும் மக்கள் மயப்படுத்துவதற்கான பல்வேறு பிரச்சார உபாயங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பொது வேட்பாளருக்கு ஆதரவாக NFGG இன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கென மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என மாவட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்துக்கான கள விஜயத்தில் தலைமைத்துவ சபை தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் MR.நஜா முகம்மது, வாட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், தலைமைத்துவ சபை உறுப்பினர் டாக்டர் சாகிர், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீம் இஷாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் எதிர்வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment