நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NFGG, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்களுடன் விஷேட சந்திப்பு

Hunais MP & Asmin Ayyoob– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், தேர்தல் செயற்பாடுள் மற்றும் பிரச்சார நடவடிக்கைக்களை வடக்கு மாகாண முஸ்லிம் மக்களிடத்தில் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அஸ்மின் அய்யூப் ஆகியோருக்கிடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்களோடு ஆராய்ந்து வருகின்றது.

Hunais MP & Asmin Ayyoob

Published by

Leave a comment