றியாத்: நாட்டுக்கு எதிராக தீவிரவாத மற்றும் சதிச் செயலில் ஈடுபட்ட 26 வெளிநாட்டினர் உட்பட 135 பேரை கைது செய்ததாக சவூதி அரேபிய நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் சிரியா – ஈராக் பகுதிகளுக்கு சென்று ஆயுத பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் நாடு திரும்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்களில் பெரும் பாலானவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு நிதி உதவி, ஆள் சேர்ப்பு, பிரசாரம் மற்றும் வெடிமருந்து தயாரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். இதில் 16 முதல் 26 பேர் சிரியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சமீபத்தில் எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் சிறுபான்மையின ஷியா போராட்டகாரர்களுக்கும் மோதல்கள் நடந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய 17 பேரும் கைது செய்யபட்டுள்ளனர் என சவூதி உள்துறை அமைப்பின் செய்தி தொடர்பாளர் அல் துர்கி தெரிவித்தார்.
Published by

Leave a comment