கொழும்பு: க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று (09) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரத்து 279 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்காக இம்முறை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 220 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களுள் 2 இலட்சத்து 6 ஆயிரம் 841 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர்.
இதேவேளை சிறைக்கைதிகள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் வழமைபோலயே இவ்வருடமும் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதற்கமைய கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் பாதுக்க வட்டரக்க சுனீத்தா வித்தியாலயத்திலும் சிறைக்கைதிகள் மற்றும் தடுப்புக் காவலிலுள்ள மாணவர்களும் பரீட்சைகள் நடத்தப் படவுள்ளன.
கண்பார்வை செவிப்புலனற்ற மாணவர்களுக்கான இரத்மலானையிலுள்ள செவிபுலன் மற்றும் கண்பார்வையற்றோர் பாடசாலையிலும் மாத்தளை ரோஹண பாடசாலையிலும் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. மேலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மஹவெவ சிவராஜ் வித்தியாலயத்திலும் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. இப்பாடசாலையில் விசேட தேவையுடைய 540 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை. தபால் அடையாள அட்டை அல்லது வழக்கத்திலுள்ள கடவுச்சீட்டுட னேயே பரீட்சை நிலையத்திற்கு சமுகமளித்தல் வேண்டும். இம்முறை 38 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பரீட்சையை மேற்பார்வை செய்யவுள்ளனர். காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் பரீட்சைக்கு பரீட்சார்த்திகள் காலை 8 மணியளவில் பரீட்சை நிலையத்திற்கு சமுகம் தரவேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். பரீட்சை அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெனவும் அவர் கூறினார்.
பரீட்சை அட்டையிலுள்ள தரவுகள் திருத்தமானவையா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து பிழைகள் இருப்பின் அதனை பரீட்சைகள் திணைக்களத்துக்கு தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன் பரீட்சை முறைகேடுகள் அல்லது பரீட்சை நிலையங்களை அல்லது பரீட்சார்த்திகளை இடைஞ்சல்களுக்கு உட்படுத்தும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு 1911, 0112 785211, 0112 785212, 0112 784208, 0112 784537 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கூடாக அல்லது 0112 784422 என்ற தொலைநகலினூடாக முறைப்பாடுகளை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை பொலிஸ் தலைமையத் திற்கும் 119 அல்லது 2421111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கூடாக முறையிட முடியுமெனவும் அவர் கூறினார்.
Published by
![news_2008_8_images_newslanka_exams[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/news_2008_8_images_newslanka_exams1.jpg?w=150&h=105)
Leave a comment