மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் ஹிக்மா அகடமியின் கலை நிகழ்வு நேற்று மாலை 4 மணிக்கு மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா மதரஸா கட்டடத்தில் அதன் தலைவர் MIM. ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாலர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் PMGGயின் சூறா சபை அமீரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமாகிய SH. பிர்தௌஸ் ஆசிரியர், முன்னாள் நகரசபை உறுப்பினர் MHA. நசீர், பிரதேச கிராம அதிகாரி செல்வி நடராஜா சியாமிலி, அமீரலி வித்தியாலய அதிபர் முஹம்மத் கான், ஹிழுறியா பள்ளிவாயல் தலைவர் MS. அபுல் ஹசன், பள்ளிவாயல் பேஷ் இமாம் மன்சூர் (பலாஹி), மஞ்சந்தொடுவாய் முதியோர் சங்க செயலாளர் MHM. ரஸ்ஸாக், மஞ்சந்தொடுவாய் மகளிர் சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஹிக்மா அகடமி பாலர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மஞ்சந்தொடுவாய் பிரதேச மாணவர்களின் ஆங்கில கல்வியினை மேம்படுத்தும் வகையில் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஹிக்மா அகடமியில் தற்போது 21 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஒரு ஆசிரியருடன் மிகவும் குறைந்த வசதிகளுடன் இவ்வகடமி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வானது நேற்று (07.12.2014) மாலை 4 மணிக்கு மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் ஹிஸ்புல்லா தரப்பினரால் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஹிழுறியா மதரஸா மண்டபத்திற்கு அவசர அவசரமாக இட மாற்றப்பட்டு இந்நிகழ்வு இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment