காத்தான்குடி: காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா 07-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அப்றா பாலர் பாடசாலையின் தலைவர் வை.எல்.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பாலர் கலை விழாவில் சிறப்பாக நிகழ்ச்சிகளை செய்த பாலர்களும் அவர்களை வழி நடாத்திய ஆசிரியைகளும் ,நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர்களும் பரிசும்,விருதும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா ,பாலர் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜனாபா .பரீதா சாஹூல் ஹமீட் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a reply to m rislan Cancel reply