மாத்தறை: மாத்தறை உயன்வத்தை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முன்னிட்டு பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகளுக்கான வயர் இணைப்புகளை பொலிஸார் துண்டித்துள்ளனர். கூட்டத்திற்கான ஒலிபெருக்கிகளை பிரதேசத்தில் பொருத்த சட்டரீதியான அனுமதிகள் பெறப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கிக்கான வயர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், கை ஒலிபெருக்கியை பயன்படுத்தி கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆளும் தரப்பின் இயலாமையின் இத்தகைய செயற்பாடுகளையறிந்து வந்திருந்த மக்கள் கவலையடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment