காத்தான்குடி: “நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றமும் நமது பங்களிப்பும்” என்ற தலைப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (05.12.2014) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரையும் மேற்படி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அன்புடன் அழைக்கின்றது.
Published by


Leave a comment