காத்தான்குடி: காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தின் நாற்பெறும் விழாக்கள் 04-12-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.
இதன் போது புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள்,பல்வேறு போட்டிகளில் சிறப்பான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ,அதிபர் ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள்,முன்னாள் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் அதிதிகளினால் பரிசும்,விருதும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு அஷ்-ஷூஹதா வித்தியாலய மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை ,கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பதுறுதீன்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாஹீம் உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment