இவ்வார இறுதியில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் ‘ஸ்னோ’வை முதன் முதலாக மக்கள் எதிர்பார்க்கலாம்!

snow– MJ

லண்டன்: இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. சாதாரண வெப்பநிலை 5 செல்சியஸில் இருந்து மைனஸ் 5 வரைக்கும் அன்மைய வாரங்களில் இங்கிலாந்தின் ஒரு சில பிரதேசங்களில் வெப்பநிலை குறைந்து சென்றது. குளிர்கால பருவத்தில் சாதாரணமாக வெப்பநிலை பூச்சியத்தை விடவும் மைனஸ் நிலைக்குச் செல்வது வழமையானது.

இந்நிலையில், இங்கிலாந்தின் வடக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் இவ்வார இறுதியில் மக்கள் இவ்வருடத்தின் முதலாவது ஸ்னோவை- பனித்துகள்களை எதிர்பார்க்கலாம் எனவும், அதன்படி இன்று வெள்ளி, நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இக்கால நிலை தொடரும் எனவும் பிரித்தானிய கால நிலை அமையம் அறிவித்துள்ளது.

snow
காப்பகப் படம்

Published by

Leave a comment