மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள், சிறுவர் பொலிஸ் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கான செயலமர்வு 05.12.2014 இன்று மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது. நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. இந்துகருணாரட்ண மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் தவிசாளரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான நீதிபதி. பிரியந்த ஆர்.பி.பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். அவருரையின் போது மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியது பொலிசாரின் கடமை எனவும், அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகள் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதை அனைவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமெனவும, சட்டத்தினை மதித்து அனைவர்களும் செயற்பட வேண்டுமெனவும், ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டதின்படி பரிகாரம் பெறமுடியும் எனவும் கூறியதுடன் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வின்போது விரிவுரையாளர்களாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி.பிரதீபாமகாநாமஹேவா அவர்களும், ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர். சட்டத்தரணி. நிமால் புஞ்சிஹேவா அவர்களும் கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.
Published by



Leave a comment