கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் சமூக சேவைகள், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தில் 2014.12.03 ஆந்திகதி புதன்கிழமை இரண்டு மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவிகளுக்கு பாதணிகள் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உப தலைவர் ஏ.எம்.எம். முர்சிதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Published by



Leave a comment