பரீஸ்: பலஸ்தீனத்தை ஒரு தேசமாக ஏற்;கும் தீர்மானத்திற்கு பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். எனினும் ஓர் அடையாள தீர்மானமாக இருக்கும். இதனை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் பாராளுமன்றங்களும் பலஸ்தீனத்தை அங்கீகரிக்க தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
பிரான்ஸின் முன்னெடுப்பை பலஸ்தீன தலைவர்கள் வரவேற்றபோதும், அதனை கடுமையாக கண்டித்திருக்கும் இஸ்ரேல், இது அமைதி நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில் அதிக ய+த மற்றும் முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக பிரான்ஸ் இருந்து வரு கிறது. இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த இரு சமூகத்திற்கும் இடையில் அடிக்கடி பதற்றம் நிலவியது.
பலஸ்தீனத்தை பிரான்ஸ் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது 339 எம்.பிக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு 151 பேர் எதிராக வாக்களித்தனர். இந்த தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டுவரும்படி பலஸ்தீன தலைவர்கள் பிரான்ஸ் அரசை கோரியுள்ளனர்.
பலஸ்தீனத்தை முன்கூட்டியே அங்கீகரிப்பது இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலும் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் கூறி வருகிறது. ஆனால் அமைதி தீர்வை எட்ட இந்த அங்கீகாரம் அழுத்தம் கொடுப்பதாக பலஸ்தீன தரப்பு குறிப்பிடுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தபோதும் சம்பிரதாயமாக இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சுதந்திர பலஸ்தீனம் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை மூலமே ஏற்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. எனினும் அண்மைக்காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது குறித்து பேசி வருகின்றன. இதில் சுவீடன் அரசு அதிகபட்சமாக கடந்த ஒக்டோபரில் பலஸ்தீனத்தை உத்தியோகபு+ர்வமாக அங்கீகரித்தது.
Published by

Leave a comment