ஊர் வீதி விஸ்தரிப்பு வேலைத்திட்டம்

unnamedஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடியின் பழைய கல்முனை வீதி என அழைக்கப்படும் பிரதான பாதையான ஊர் வீதியானது நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குண்றும் குழியுமாக காணப்படுவது பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மழை காலங்களில் இவ்வீதியினால்  பயணிக்கும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதற்கமைவாக காத்தான்குடியில் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போதிலும் இவ்வீதியினை 10 மீட்டர் அகலமாக்கி அதாவது மத்தியிலிருந்து 5 மீட்டர் அகலமாக்கி வடிகான்களுடன் கூடிய கார்பட் வீதியாக புணரமைப்புச் செய்வதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அண்மையில் தெரிவித்திருந்தார்.

unnamed

இவ்வீதி விஸ்தரிப்பிற்கு தடையாகவுள்ள கட்டடங்களை அகற்றித்தருமாறு கோரி நகர சபையினால் 14.10.2014 ம் திகதி நகர சபைக்கட்டளைச்சட்டம் 74:84 வது பிரிவின் கீழ் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுமாறு  குடியிருப்பாளர்களின் வீட்டு முன் சுவர்களில் நகர சபைத்தலைவரின் ஒப்பத்துடன் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்ததுடன் சிவப்பு நிறத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுமிருந்தது.

ஆனால் ஒரு சிலரைத்தவிர அனேகமானோர் இதுவரையிலும் (04.12.2014) எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இது விடயமாக நகர சபைத்தலைவர் எஸ். எச். எம். அஸ்பரிடம் வினவியபோது மழை காரணமாக இப்பாரிய வேலைத்திட்டம் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும் டிஸம்பர் 15 ம் திகதி இவ்வேலை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக இமாம் கொமைனி வீதியில் வேலைத்தளம் (யாட்) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

unnamed1

அத்துடன் ஏற்கனவே கூறப்பட்ட பிரகாரம் வீதி அமைப்புக்கு தடையாகவுள்ள எங்களால் அடையாளமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து கட்டடங்களை அகற்றித்தருமாறும் பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.

எனினும் பொதுமக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் இப்பாரிய வீதி விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Published by

Leave a comment