கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள கிழக்கின் முஸ்லிம் தனிமாவட்ட கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நிராகரித்துள்ளதால், தாங்கள் தொடர்ந்தும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பு சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு அளிப்பதை உறுதியளித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணக்கத்தை வெளியிடவில்லை என்பது உலகமறிந்த விடயம். இதனால், தனிப்பட்ட ‘பைல்’களே முஸ்லிம் காங்கிரஸை நிர்வகிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Published by
![slmc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/slmc14.jpg?w=150&h=113)
Leave a comment