“பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுக்க சந்திரிக்கா அனுமதிப்பதில்லை”

maithriகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுக்க சந்திரிக்கா அனுமதிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சந்திரிக்காவை, ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கச் செய்வதனை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்திரிக்கா பங்கேற்கவில்லை. பொது மேடைகளில் கூடிய அளவு சந்திரிக்காவை பங்கேற்காமல் செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.

தனிப்பட்ட குரோதத்தையும் துவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க மேடைகளில் கருத்துக்களை வெளியிடுவதாகவும் இது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினருக்கு பிடிக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

maithri

Published by

Leave a comment