கொழும்பு: அரசாங்கப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை நாளை (5) யுடன் முடிவடைகின்றது. இதேவேளை 2015ம் ஆண்டிற்கான முதலாந் தவணையானது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு ஜனவரி 05ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரச பாடசாலைகளும் ஜனவரி 07,08,09 ஆகிய மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12 ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமைகளுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் ஜனவரி 11ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் மூடப்பட்டு பின்னர் 16ம் திகதியன்று கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படு மெனவும் கல்வியமைச்சு தெரிவித்தது.
புனித பாப்பரசரின் வருகையையொட்டி இந்தத் தினங்களில் றோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பெண்கள் வித்தியாலயம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, சென். ஜோசப்ஸ் ஆண்கள் வித்தியாலயம், கிரேண்ட்பாஸ் சென்.அந்தனிஸ் வித்தியாலயம், அல் அஸார் வித்தியாலயம், புளுமெண்டல் தமிழ் வித்தியாலயம், மருதானை ஆனந்தாக் கல்லூரி, அசோக்கா வித்தியாலயம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள 43 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
இதேவேளை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் 83 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Sri-Lankan-School-Uniform--[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/sri-lankan-school-uniform-1.jpg?w=150&h=113)
![Sri-Lankan-School-Uniform--[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/sri-lankan-school-uniform-1.jpg?w=300&h=225)
Leave a comment