பஹ்ரைனில் 11 வயது மாணவியை முத்தமிட்ட குற்றம்: இந்திய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை!

bahrainமனாமா: பஹ்ரைனில் 11 வயதான மாணவி ஒருவரை மானபங்கம் செய்த இந்திய ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடான பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா அருகே கிழக்கு ரபா நகர் உள்ளது. அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு 11 வயது பள்ளி மாணவி ஒருவர் சென்றிருந்தார்.  அந்த உணவு விடுதியில் வேலை செய்து வந்த 31 வயது இந்திய ஊழியர் அந்த மாணவியை கன்னத்தில் முத்தமிட்டு மானபங்கம் செய்து விட்டார்.

இது தொடர்பாக மாணவியின் புகாரின் பேரில், மனாமாவில் உள்ள உயர் கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மாணவி நடந்தது என்ன என்பது குறித்து நீதிமன்றத்தில் தெளிவான சாட்சியம் அளித்தார்.

விசாரணை முடிவில் இந்திய ஊழியர் மீதான மானபங்க குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Published by

One response to “பஹ்ரைனில் 11 வயது மாணவியை முத்தமிட்ட குற்றம்: இந்திய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை!”

  1. I m now Bahrain from kattankuy tnk

Leave a reply to abulsattar Cancel reply