பொலன்னறுவை: பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னதாக இந்தக் கூட்டத்தை நடத்துமிடத்தில் பிக்குமார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூடாரத்தை நேற்று மாலை பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி அரசாங்கம் கழற்ற வைத்திருந்தது.
நேற்று அதிகாலை முதல் பராக்கிரமபாகு குளத்தில் மேலதிக நீரை வெளியேற்றும் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை பூராகவும் ஒரு வதந்தி பரப்பப்பட்டிருந்தது. அவ்வாறு நீர் திறந்து விடப்பட்டால் மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட இருந்தது.
எனினும் அரசாங்கத்தின் பல தடைகளையும் தாண்டி பெருந்திரளான மக்கள் வெள்ளத்தில் ஆரம்பமானது மைத்திரிபால சிறிசேனாவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.
Published by



Leave a comment