யாழ்- பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியமும் பரீட் பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்த வழிகாட்டல் கருத்தரங்கு

seminar– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: யாழ்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியமும் காத்தான்குடி பரீட் பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 29-11-2014 இன்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

யாழ்பாணம் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எச்.எம்.எம்.கலீம் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

seminar

இதன் போது யாழ்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான விரிவுரைகள் இடம்பெற்றன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், பரீட் பௌண்டேஷனின் பணிப்பாளர் கே.எல்.எம்.பரீட், பரீட் பௌண்டேஷனின் செயலாளர் றுஹையில் உட்பட யாழ்பாணம் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

politics

Published by

Leave a comment