பாலமுனை: ஸ்ரீ லங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் ஆகியவற்றிற்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இலவச இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தின் கீழ் மண்முனைப் பற்று பாலமுனை பிரதேசத்தில் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு 29-11-2014 இன்று சனிக்கிழமை பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாலமுனை அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வசதி குறைந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாயல்களுக்கு இலவச குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் முபாறக்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட், ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்களான டி.எல்.எம்.குறைஷ், பீ.ரீ.எம்.பாரூக், எம்.ரீ.எம். கரீம் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment